Monday, October 15, 2012

மெளனம்...!
தீண்டும் காற்றினில்
சிலிர்த்திடும் மேனிபோல்
செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!

வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!

எத்தனை எத்தனையாயிரம்
கல்லறைகள் கட்டிக்கொள்கின்றன
இந்த நிசப்தங்கள்..!

மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!

Thursday, October 4, 2012

நீ + நான் = நாம்கண்கள் சிந்தும் 
கண்ணீர் - நீ
தெளித்து சென்ற 
பன்னீர்

எந்தன் காதல்
சொல்ல - நான்
உந்தன் நிழல் 
ஆவேன்..!

காத்துக்கொண்டு
நின்றால் - காலமென்னை
கொல்லும் - உந்தன்
கண்கள் தீண்டிச் சென்றால்
எந்தன் பாலைவனம்
பூக்கும்..,,!

உன் காதலின்றி போனால்
என் மூச்சு நின்று
போகும்..!

நிலவைப் போல தேய்ந்தேன்
உன் பூ முகம் காண
காதல்தனைக் கொண்டால்
காலம் காற்றய்
ஓடும்..,

உந்தன் கரம் கொண்டால்
எந்தன் உயிர் நீழும்
எந்தன் காரம் கொண்டால்
உந்தன் வாழ்வு
சொர்க்கம்..!

காத்திருப்பு...!
என்னைத் தீண்டும்
உந்தன் சுவாசம் 

கொஞ்சம் கொஞ்சம்
காதல் பேசும்..!

என்னைத் தீண்டா
உந்தன் நேசம் 
கொஞ்சம் கொஞ்சம்
என்னைக் கொல்லும்..!


வார்த்தையொன்று சொல்லி
விட்டால் - வாழ்ந்து விடுவேன்
அந்தன் சொல்லில் -  
வீழ்ச்சியொன்று
தாக்குமுன்னே வந்து விடு
எந்தன் கண்ணே..!

உந்தன் கண்கள் 
பேசும் வார்த்தையொன்றே
எந்தன் இதயம் வேண்டும்
வரம் அன்பே...!

காதலென்ற ஓற்றைச் 
சொல்லில் பற்றுக்
கொள்ளும் காலமிது
நீயின்றி போகும் போது
வாழ்க்கையின்றி
போகுதன்பே..!

Wednesday, October 3, 2012

என்னுள் நீநீ என்னுள் ஆட்சி
செய்யும் நிமிடங்களனைத்தும்
பொக்கிக்ஷமாய் என்னுள்
ஆழப் புதைந்து
நாணிக் கண்கள் 
மூடும் வேளை
கனவாய் வந்து
செல்லச் சில்மிக்ஷங்கள்
நீ செய்கையில்
நிஜத்தில் உன்னோடு
வாழுமின்பத்தை நிழலுகலில்
நான் அடைந்தேன்..!


உன் மரணம் தந்த 
அதிர்வலைகள்
இன்றும் என்னுள் 
நிழற்படமாய்..

அன்று என்னைத் தீண்டிய
உன் விழிகளின் 
ஆழப்பார்வையின்
அர்த்தங்கள் இன்று
என்னுள் வலி தாங்கும்
படலம்...

என்னை நீ அழைத்த
அந்த தருணம் 
நான் என்னை மீண்டும்
தொலைத்த நிமிடம்

நீ இவ்வுலகில் 
இல்லையெனிலும்
என்றும் என்னுள்
உயிரோட்டமாய் 
வாழ்கிறாய்...!

பயணம் + வெற்றிசிறகு விரித்த
பறவையாய் காற்றைக்
கிழித்துப் பறக்கிறது
என்னைத் தாங்கிய 
விமானம்...!

கலைந்தோடும் மேகங்கள்
ஒன்றோடு ஓன்று
உரசி விளையாடும்
விந்தை கண்டு
எனக்குள் ஓரு
பரவசம்..!

முதல் அனுபவம்
விண்ணைத் தொடும்
பரவசம் நாடி நரம்பெல்லாம்
பரவிடும் அதிசயம்..!

படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
என் இதயம் - புதிதாய் 
பிறந்த பரவசம்...!

உறவுகளைப் பிரிந்த
வலி என்னுள் பிறப்பெடுக்கும்
வேளையில் - சில பல
நினைவுகளில் விடுபட்ட
நிம்மதிப் பெருமூச்சு
என்னில்..!

மண்ணை விட்டு மண்
தாண்டிய தயக்கம் என்னில்
இல்லை சிறிதும்

அடிமைச் சிறகில் விடுபட்ட
பறவையாய் பறக்கத்
துடித்தது மனது
கட்டுப்பாடு என்னும்
விலங்கு உடைபட..!

பிறந்த மண் பாசமின்றி
புகுந்த மண் பற்றுமின்றி
என்னை அலைபாய வைத்திடும்
நினைவுகளை எனக்குள்
அடக்க முயற்சிக்கிறேன்
லட்சியமெனும் குறிக்கோள்
கொண்டு..!

சிதறிய சிந்தனைகள்
வட்டத்துக்குள் ஆட்பட
புதிய வாழ்க்கை புதிய
சிந்தனை ஆட்கொள்ள
விரைந்து ஓடும் நிமிடங்களின்
பின்னால்
நானும் விரைகிறேன் 
வெற்றியெனும் கோபுரத்தை
எட்டிப் பிடித்திட....!

Tuesday, October 2, 2012

இனிய போராட்டம்


பத்துமாதம் சுகமான‌
சுமையென தன்னுள்ளம்
அன்புவுள்ளம் பெருக்கெடுக்க‌
காத்திருந்தாள் அன்னையிவள்
பிஞ்சுள்ளம் முகம்காண..!

விதி வேறு கூற 
அவள் விதி இதுவென‌
கூற அலரிவிட்டாள்
தாயிவள் - நான் 
கண்ட கனவனைத்தும்
இவனைப் என்னுள்
செதுக்கி பிஞ்சுவிரல்
நான் பிடிக்க பஞ்சுப்
பாதம் இவ்வுலகை மிதிக்க‌
என்னிரு கண்களும்
பரவசம் கொள்ளும்
ஆனந்த நிலையே..

நானின்றி போனாலும் 
இவன் பிறக்கும் வரம் ஓன்றே
எனக்கு வேண்டும் - இறைவாவென‌
தாயுள்ளம் வேண்ட

கர்ப்பக் குழந்தை 
பிஞ்சுக் கரம் கொண்டு
கெஞ்சிக் கோட்டது
கடவுளிடம்

என்னைப் பெற 
என்னைப் பெற்றவள்
இயற்கையெய்வதை விட‌
பத்து மாதம் இவள்
கருவில் தவமிருந்த‌
மகிழ்வோடு இவ்வுலகை
தீண்டாது நான் உன் மடி
சேர்கிறேன் இறைவா..!

கண் திறந்தார் தாயுமானவர்
தாயும் சேயும் நலமென 
மென்னகை புரிந்தார்
வைத்தியர்..

ஆனந்தம் பொங்கிடும் பரவசம்
அன்னையவள் முகத்தினில்
பொளர்ணமி நிலவொன்று
பச்சிளம் குழந்தையில்...

போராட்டம் இனிதே
நிறைவுற - கொண்டாட்டம்
ஆரம்பமாகியது இவர்கள்
வாழ்க்கையில்...!


Monday, October 1, 2012கற்பனையில் வாழ்க்கை
கலைந்துவிடுமென தெரிந்தும்
கண்கள் கனவு தேடி
ஓடுகின்றது - உன்
நிழலினில் இளைப்பாறிட..

முயற்சிதோல்விக்கு வெற்றியை
பரிசளிக்க முயற்சிக்கின்றேன்
நம்பிக்கை என்னும் 
துணைகொண்டு..

முயற்சிக்கள் முடிவில்லாது
பயணிக்கின்றது தோல்வியெனும்
பாதையில் - வெற்றியெனும்
திருப்பம் தேடி....!

Wednesday, September 26, 2012

பந்தம்...!


கனவுகளில் மட்டுமே
உயிர் வாழ்கிறது
உன்னோடு நான் கொண்ட‌
பந்தம்..
அதுவே  என் வாழ்வில்
நான் காணும்
இன்ப பந்தம்

Sunday, May 4, 2008

!!** எமது உறவு **!!

இதயம் திறந்து
உயிர் கலந்து
இன்பம் பகிர்ந்து
துன்பம் கலைந்திடும்
காதலா எமது
இல்லையே...

இதயம் உடைந்து
துன்பம் கொண்டு
இன்பம் கலைந்து
உயிர் துறந்ததே
எமது உறவு...

!! ** விடைதெரியா கேள்விகள் **!!


மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....

செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....

வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...

உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...

நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....

என் விரலோடு உன் விரல்கள்
செல்லச் சண்டை பிடிக்கையில்
மேகங்கள் ஓன்றோடு ஒன்றுரசி
பன்னீர் தெளிப்பதுமேனோ...

என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.