Monday, November 15, 2021

!! என் பொக்கிஷம் !!



உனை உண்மையாக 

காதலித்ததாலோ என்னவோ

என் காதல் தோற்றுப் 

போனது - ஆனாலும்

உன் மீதுள்ள 

காதல் என்றுமே 

பொய்யாகவுமில்லை

குறையவுமில்லை..!


பல வருடங்களாக

சேர்த்து வைத்த காதல்

அனைத்தையும் உன்னிடம்

கொட்டித் தீர்க்க

வேண்டுமென்பதே - என்

நீண்ட நாள் கனவு

என் கனவிற்கு முட்டுக்கட்டை

போட்டு விடாதே

அன்பே..!


அன்று தொடங்கியது

இன்றும் தொடர்கிறது

என்றுமே தொடரும் - எம்

முடிவே இல்லாத

காதல்..!


ஆயுள் முழுவதும் 

உன்னுடன் வாழ முடியாது

என்றாலும் - உன்னோடு

நானிருந்த நாட்கள்

அனைத்தும் - என்

வாழ்க்கையில் 

எனக்கு கிடைத்த 

பொக்கிஷங்கள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.