Tuesday, November 9, 2021

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் முதல் கனவே..!



அன்று நான் உனை 

விரும்பும்போது 

புரியவில்லை - என் 

உண்மை காதல்

உனக்கு..,

இன்று நம் காதல் 

எனும் பந்தத்தில் 

முடிந்தது - என்

காதல்..!


காதலென்ற உறவில்

என் உயிரோடு

கலந்தவன் நீ..,

நீ எங்கு இருந்தாலும்

உன் நினைவலைகள்

எனக்கு வேதங்களாகும்..!


கண்கள் என்றுமே 

மனதின் மொழி 

அறியும் - அதனால் தானோ 

உனை என்னிடம் 

சேர்த்து வைத்து 

விட்டது - என்

பிறந்தநாளில்..,

உன் வாழ்த்தே

பொக்கிஷம் - என்

வாழ்க்கையில்..!


இனிமை எனும் 

ஒன்றை - உன் 

நினைவுகளால் 

தந்தவனே..,

புன்னகை என்ற ஒன்று

என்றுமே உன் 

இருப்பிடம் தேடி 

வந்தடைய

மனநிறைவுடன் 

இந் நல்ல நாளில் 

உன் பிறந்த நாளில் 

உரிமையோடு 

வாழ்த்துகின்றேன்..!


இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அன்பே 💗 

என் முதல் கனவும்

நீயே - முடிவில்லா

கனவும் நீயே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.