Monday, October 29, 2007

இதயம் கண்டதால்

இனியவள்


தென்றலோடு கதைபேசும் 

பூக்கள் காம்பை விட்டு 

உன் கரங்களுக்குள்

புகுந்து கொள்கின்றன

பச்சிலம் பாலகன் போல்

தஞ்சம்..!


என் இதயம் பறக்கத் 

துடிக்கின்றது - உன் 

இதயத்திடம்

தடை போடுகின்றது

என் நாணம்..!


சுகந்தம் வீசும் 

மலர்கள் கூட

நறுமணம் இழந்து

தவிக்கின்றன உன்

கேசத்தின் சுகந்தத்தின்

முன்னால்..!


வானவில்லின் நிறங்களைப் 

பிழிந்து என் வாழ்வை 

வர்ணமயமாக்கி

வானவில்லை நிறமற்றதாய்

மாற்றிச்சென்று விட்டாயடா..!


ஒளிரும் விளக்கில்

உன் முகம் அழுத்த

தயங்குகின்றது விரல்கள்

ஆழியை...


படிக்க நினைத்ததை 

மறந்து பாடித் 

திரிகின்றேன் - உன் 

பல்லவியை..!


பற்றியெரியும் வீடு

தீக்குச்சியாய் தோன்ற

தீக்குச்சி தோன்றுகின்றது

பற்றியெரியும் காடாய்..!


கண்கள் உன்னை 

கண்டதால் - நீ 

என் இதயத்துக்குள் 

நுழையவில்லை

இதயம் உன்னைக் 

கண்டதால் கண்களுக்குள் 

நுழைந்து கொண்டாய்..!

1 comment:

முகவைத்தமிழன் said...

அன்பின் தோழர்,

யதார்த்தமாக இங்கு வந்த நான்..தடை பட்டு நீண்ட நேரம் நின்று போனேன்!!

வார்த்தைகளின் சோகம் இன்னும் என்னுள்....நீங்க மறுக்கும் நினைவலைகள்...ஆம், உங்கள் வார்த்தைகள் எம்முள் பல பழைய நினைவுகளை கிளரி விட்டன!!

இருந்தபோதிலும் இங்கு விட்டுச் செல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை..இருந்தாலும் நான் வந்து போனதன் அடையாளமாய் என்றோ...எப்போதோ...ஏதோ ஒரு கவிஞனின் என்னை பாதித்த வரிகளை எனது நினைவுகளாய் இங்கு பதிக்க என்னுகின்றேன்...

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

உன்னில் பூப்பரிக்க வந்தேன்
உன்னிலேயே பூத்துப் போனேன்

உன்னை அள்ளிக் காண்டோட வந்தேன்
ஆனால் உன்னுள்ளேயே சங்கமித்தேன்...

பதிலை பிச்சை கேட்டு தத்துவக் கதவையெல்லாம் தட்டிவிட்டு...

ஏதும் பெறாத என் கேள்விக்கனைகள்
இதோ உன் வீட்டு வாசலில் மூர்ச்சையாகின....

வா..தோழி..வா...உன் பதில் தண்ணீர் தெளித்து என் கேள்வி மூர்ச்சை தெளிவி...

உன் வீணைச் சொற்கள் மெளனத்தை போர்த்தியிருந்தது போதும் தோழி...

வெயில் காய வரட்டும் வெளியே அனுப்பு...

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.