Monday, November 5, 2007

தட்டித் தட்டி எழுப்புகின்றன.....

இனியவள்

வானம் அழுவதால்
மழை பொழிகின்றதா
உன்னனக் காணாததால்
கண்ணீரை அருவியாய்
வாரி இரைக்கின்றனவா....

வானவில்லின் நிறங்களை
திருடி பிரம்மன் உன்னைப்
படைத்து விட்டான் - என்று
வானவில்கள் வேலை நிறுத்தம்
செய்கின்றன.....

நிசப்தத்தில் ஊடுவுறும்
மெல்லியாய் காற்றாய்...
நினைவு நாடியை
தென்றல் தீண்டி
மெல்லிய இசையை
உருவாக்கிச் செல்கின்றது...

வானத்தைத் தொட்டு விட
போட்டி போடும் நிலவோடு
போட்டியிடுகின்றன - உன்
நினைவுகளும் விடியலை
விஞ்சிடும் விந்தையோடு...

நுனிவிரல் ஈரம் கொண்ட
போனா காகிதங்களை
நனைத்திட தட்டித் தட்டி
எழுப்புகின்றன கவிதைகளை...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.