Wednesday, November 14, 2007

மறதிக்குள் மறதி

இனியவள்

விழி கொண்டு 

உனைத் தேடுகின்றேன்

காற்றாய் மாறிச்

 சென்றுவிட்டாய்...!


கடலில் விழுந்த 

மழைத்துளியைத்

தேடுவது போல் 

உன்னைத் தேடுகின்றேன்

எனக்குள்...!


உயிரை இழந்து 

உருவம் ஒன்று 

காத்திருக்கின்றது

எமனாய் கவர்ந்து சென்ற

என் உயிரைத் திருப்பிக் 

கொடுத்து விடு...!


உனை மறக்க நினைக்க 

நினைக்க கிணற்று நீர் போல் 

ஊற்றெடுக்கும் - உன்

நினைவுகளுக்கு அணைபோட 

முடியவில்லை...


போலி வாழ்க்கையே 

வாழ்கின்றேன் உன்னை 

நினைத்து - என் 

வாழ்க்கை எனும்

சோலைவனத்தில் 

பூத்துக்குலுங்கிய

இன்பம் எனும் 

நீரூற்றை பிரித்துச் 

சென்று விட்டாயே..! 


உன் நினைவுகளை 

மறக்க நினைக்க 

நினைக்க - நான் 

மறந்து போகின்றேன் 

என்னை.., 

மறக்க வைப்பதே - உன் 

நினைவு தான் 

என்றும் என் மனதுக்குள் 

உயிரோட்டமாய்

நீ இருப்பாய் - என்

அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.