Friday, November 9, 2007

அழிக்காதே



இயற்கையே நீ 

கொடுத்த வளத்தை 

நாம் எடுத்து

உன்னை 

அழிக்கின்றோம்...!


நீயோ மீண்டும் 

மீண்டும் கொடுக்கின்றாய் 

நன்மைகள்

நாம் நலமாய் 

வாழ்ந்திட..!


நன்மை செய்யாவிடிலும்

பதிலுக்கு

தீமை செய்யாதே 

மானிடா...!


பல வழிகளில் 

உனைக் காத்திடும்

இயற்கையை 

காக்காவிடினும்

அழித்திடாதே...!


வருங்காலம் கண்ணுற்று 

நோக்காமல் 

போய்விடும் - அழகிய 

இயற்கையை..!


தரத் தர பெறுகின்றாய்

வெட்டி வெட்டி 

எரிக்கின்றாய்..,

வெட்ட வெட்ட 

முளைக்கின்றது

அதையே வேரோடு 

அழிக்க முனைகின்றாய் - உன்

லாபத்திற்காக...!


நீ அழிப்பது 

மரத்தையல்ல - உன் 

வருங்கால 

சந்ததியினரின்

நல்வாழ்வை..!


ஒரு மரத்தை நீ 

அழித்தாலும் - ஆக்கிவிடு 

பல மரங்கள்

என்றும் உனக்கு 

நிழலாய் இருந்து

இயற்கை அனர்த்தங்கள் 

இன்றி உனைக் 

காப்பாற்றிடும்..!

1 comment:

Vishnu... said...

நல்ல எண்ணங்களை
பூக்களாக்கி கவிதை மாலை தொடுதுள்ளீர்கள்..
அழகாக மணம் வீசுகிறது ....
வாழ்த்துக்கள் ,...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.