Wednesday, November 14, 2007

என் தோழி

இனியவள்

குறையில் நிறை கண்டு
என்னில் உனைக் கண்டு
உன்னில் எனைக் கண்டு
என் இன்பத்தில் இன்பம் கண்டு
துன்பதில் துன்பம் கொண்டு
எனக்கு மூன்றாம் கையாய்
விளங்கும் தோழியே..!

இசையாய் நான் இருந்தால்
வரியாய் நீ வருகின்றாய்
மழையாய் நான் வந்தால்
குளமாய் மாறி என்னைத்
தாங்குகின்றாய்...!

என் மனதின் காயத்திற்கு
மருந்தாய் உன் அன்பெனும்
தென்றலாய் வந்து வருடிச்
செல்கின்றாய்...!

காற்றுக்கு வேலி போடுவது போல்
உன் நட்புக்கு வேலி போட முனைந்தேன்
உயிருக்குள் கலந்து விட்டாய்...!

பூவின் வாசமாய் எனக்குள்
வாசம் வீசுபவளே 
ஏழெழு ஜென்மங்கள் 
வேண்டும் எனக்கு
உன் தோழியாய் உன் தோள்
சாய்ந்திட...!

பரந்து விரிந்திருக்கும் பூமியில்
தனித்திருக்கும் என்னோடு
சேர்ந்து பறக்கும் 
பட்டாம் பூச்சியே
என்றும் உன்னோடு 
இணைந்திருப்பேன்
என் ஆயுள் வரை...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.