Wednesday, November 14, 2007

தொலைந்து போகிறது..!

இனியவள்

சூரியனின் கதிர்கள்
நீரைத் தழுவ தங்கமாய்
ஜொலிக்கிறது அருவி..
மெய்மறந்து சிலிர்க்கிறது
தாகம் தணித்திட வந்திட்ட
பறவைகள் இயற்கையின்
விந்தையில்..!

உன் விந்தையில் ஆச்சரியப்படது
கண்கள் மட்டுமல்ல 
இதயமுமே - ஆதரவாய் 
கரம் கோர்த்த
விரல்கள் கன்னத்தில்
ஓவியம் வரைந்து 
சென்றதிலே..!

விரல்கள் வரைந்த கோலத்தை
அழித்திட விரைகின்றது
கண்ணீர்க் கோடுகள்...!

இதயத்தின் ஓட்டையில் 
நுழைந்து உயிரின் வாசல் 
துறந்து உணர்வுகளைப்
பறித்துச் செல்லும் 
காதலனே..!

மலர்களின் வாசத்தைப் 
பிரிக்க நினைத்து 
மலரைக் கசக்கி
அதன் உயிரைப் 
பறிக்காதே..!

உன் நினைவுகளை என்னில்
இருந்து பிரித்திட - என்
உயிரைக் கூலியாய் 
கேட்கிறாய்..!

நிலவைத் தேடும் சூரியனாய்
உன் நினைவுகளை 
தேடித் தேடி அலைகின்றேன் 
அலைகளின் நடுவே
தொலைந்து போன 
காலடிச் சுவடாய்..!

இறந்த கால நிழலில் 
தொலைந்து
போகின்றது 
நிழல்காலத்தின்
வசந்தங்கள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.