Friday, November 16, 2007

!! புலம்பித் தவிக்கின்றது !!

இனியவள்

வெளிச்சத்துக்குள் இருட்டைத்

தேடுகின்றாய் குருடனாய்

கடலில் நீராய் கரைந்தவனை

தேடுகின்றாய் கானலாய்

போனதை அறியாமல்..!


அறிந்தும் அறியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்

புரிந்தும் புரியாமலும்

இருக்கின்றாய் உனக்குள்

அவன் அணுஅணுவாய்

கலந்து விட்டதை...!


பட்டுப் போன மரத்தை

துளிர்விக்கப் பார்க்கின்றாய்

உன் கண்ணீரால் உரம்பாய்ச்சி

சொர்க்கமாய் இருந்த

அன்னையின் அரவணைப்பு

இன்று அனலாய் சுடுகின்றது

உன் இதயத்தில் இருந்தவன்

விலகிச் சென்றதும்..!


விலகிச் சென்றது 

விலகியதாகவே இருக்கட்டும் 

மூளை சொல்கின்றது

விலகியது என் உடல் 

இல்லையே உயிரல்லவா 

இதயம் புலம்பித் தவிக்கின்றது

இதயம் இல்லாதவனை நேசித்ததால்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.