Thursday, November 1, 2007

இயற்கை

இனியவள்

பூப் பூத்துக் குலுங்கும்
பூங்காவனத்தில் தேடுகின்றன
வண்டுகள் தேன் சிந்தும்
பூக்களை...

நடனமாடிக் கொண்டிருக்கின்றன
தென்றல் வந்து தாலாட்டிச்
செல்ல அன்று மலர்ந்த மலர்கள்
அன்றே மடிவதையறியாமல்....

காற்றுக்கு கடிவாளமிட்டு
தன்னோடு கட்டிப்போட
முனைந்து கொண்டிருக்கின்றன
மரங்கள்....

இரைதேடிச் சென்ற
தாய்ப் பறவையை எதிர்பார்த்து
இசை மீட்டிக் கொண்டிருக்கின்றன
குஞ்சுப் பறவைகள்...

தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
சூரியன் மலைகளுக்கு நடுவே...

நட்சத்திரங்கள் அணிவகுக்க
பவனி வருகின்றது நிலா
விண்ணைச் சுற்றி...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.