Friday, November 9, 2007

காத்திருக்கும் நிஜம்

இனியவள்

எனக்கு ஜனனம் நீ 

தந்தது அதுவே 

காதல் ஜனனம்..,

உன் நாட்களை 

நான் வாழ்கின்றேன்

என் நாட்களை 

நீ வாழ்கின்றாய்...!


இருள் இல்லாவிடின் சூரியனின்

அருமை தெரிவதில்லை

பிரிவொன்று நேராவிடின் உன்

அருமை தெரிந்திராதே 

எனக்கும்...!


இருளில் இருளாய்க் கலந்து

என்னைத் தொடர்கின்றாய்..,

சூரியனைக் காணாவிடின்

இதழ் மூடும் தாமரை போல்..,

உனைக் காணாத இக்கண்கள்

வேறெதனையும் காணப் பிடிக்காது

தாழ்போட்டுக்

கொள்கின்றன..!


உணவின் அருமை 

பசியில் தெரிகின்றது

உனதருமை 

பிரிவில் தெரிகின்றது..!


கடல் அலைகள் போல் துள்ளித்

துள்ளி வருகின்றேன்

கரையாய் இருக்கும் உன்னைத்

தொட்டுவிட..,

தங்கத்தை உருக்கும் 

தணலாய் - எனை 

உருக்குகின்றாய்

உன் அன்பு 

கொண்டு...!


மலராய் நான் மாற 

தேனாய் இருக்கும் - என் 

அன்பைப் பருக 

வண்டு போல்

வட்டமிடுகின்றாய் 

என்னை...!


உன் நினைவுகளை 

என் காதல்..,

நெஞ்சில் வீசி 

தூக்கத்தைக்

கலைக்கின்றாய் - என் 

கனவுகளைக் கலைக்கின்றது

விடியும் விடியல் எனக்காய்

காத்திருக்கும் 

நிஜத்திற்காய்..!


காத்திருக்கின்றேன் 

விதையாய் இருக்கும் - நம் 

காதல் விருட்சமாய் 

மாறுவதற்கு....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.